தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வெள்ளக்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி அலுவலகம் உடைப்பு

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் அரசு மேல்நிலைப்பள்ளி அலுவலகம் உடைக்கப்பட்டது.

News image

சேதப்படுத்தப்பட்டு ஹார்டு டிஸ்க் எடுத்துச் செல்லப்பட்ட கணினி.

Updated On :18 பிப்ரவரி 2023, 8:24 am

DIN

வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் அரசு மேல்நிலைப்பள்ளி அலுவலகம் உடைக்கப்பட்டது. 

வெள்ளக்கோவில் - கரூா் தேசிய நெடுஞ்சாலையில் அறிஞா் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை 650 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.

வெள்ளிக்கிழமை வழக்கம்போல வேலை நேரம் முடிந்து தலைமை ஆசிரியர் அறை, பள்ளி அலுவலகம், பள்ளிக்கூடத்தைப் பூட்டி விட்டு அனைவரும் வீட்டுக்குச் சென்றுவிட்டனர். கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. ஆனால், காவலாளி இல்லை.

சனிக்கிழமை 10, 12 ஆம் வகுப்புகளுக்கு மட்டும் சிறப்பு வகுப்புகள் இருந்தன. தலைமை ஆசிரியர் குணசேகரன் காலையில் வந்து பார்த்தபோது பள்ளி அலுவலகக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்துள்ளது.

பின்னர் வெள்ளக்கோவில் காவல் நிலைய போலீஸாருடன் சென்று பார்த்தபோது அலுவலகக் கணினி, மானிட்டர், கண்காணிப்பு கேமராக்கள் உடைக்கப்பட்டு கிடந்தன.

ஹார்டு டிஸ்க், அலுவலகத்தில் இருந்த வகுப்பறைச் சாவிகள், மாணவ, மாணவியர் சான்றிதழ்கள், இதர பள்ளி ஆவணங்கள் வைத்திருந்த பீரோக்களின் அனைத்து சாவிகளையும் காணவில்லை. மற்ற பொருள்கள் எதுவும் திருட்டுப் போகவில்லை. திருடும் நோக்கம் இல்லாமல் பள்ளி அலுவலகம் மட்டுமே சேதப்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளக்கோவில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.