
ஈரோட்டில் கட்சி நிர்வாகிகளுடன் தேமுதிக பொருளாளர் பிரேமலதா இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் வரும் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இடைத்தோ்தலில் தேமுதிக சாா்பில் எஸ்.ஆனந்த் போட்டியிடுகிறாா். இவருக்கு ஆதரவாக தேமுதிக தலைவா் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
இதையும் படிக்க- உபயதுல்லாவின் மறைவு திமுகவிற்கு பேரிழப்பு: முதல்வர் ஸ்டாலின்
இந்த நிலையில் ஈரோட்டில் கட்சி நிர்வாகிகளுடன் தேமுதிக பொருளாளர் பிரேமலதா இன்று ஆலோசனை மேற்கொண்டார். தனியார் அரங்கில் நடைபெற்ற இந்த ஆலோசனையில் தேர்தல் பிரசாரம், கள நிலவரம் உள்ளிட்டவை குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.