'டுடோரியல் ஒன்றும் கேவலமான இடமல்ல' - சு.வெங்கடேசனுக்கு தமிழிசை பதில்!

டுடோரியல் ஒன்றும் கேவலமான இடமல்ல என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசனுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை பதில் அளித்துள்ளார். 
'டுடோரியல் ஒன்றும் கேவலமான இடமல்ல' - சு.வெங்கடேசனுக்கு தமிழிசை பதில்!
Updated on
1 min read

டுடோரியல் ஒன்றும் கேவலமான இடமல்ல என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசனுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை பதில் அளித்துள்ளார். 

சமீபத்தில் கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தெலங்கானா ஆளுநர் தமிழிசை, 'தமிழக மக்கள் எங்களின் திறமையை அங்கீகரிக்கவில்லை, பிரதமர் மோடியும் அமித் ஷாவும் எங்களின் திறமையைக் கண்டு ஆளுநராக ஆக்கியிருக்கிறார்கள்' என்று பேசியிருந்தார்.

இதுகுறித்து மதுரை எம்.பி. சு. வெங்கடேசன், 'ராஜ்பவன்கள் எல்லாம் பெயிலானவர்கள் படிக்கிற டுடோரியல் கல்லூரிகள் என்கிறீர்களா?. பரிட்சையில் பெயில் ஆன பிறகு பிரதமர் பாஸ் போட்டு விட்டார் எனில் அது போலிச் சான்றிதழ் இல்லையா?' என ட்விட்டரில் தமிழிசைக்கு கேள்வி எழுப்பியிருந்தார்.

தற்போது இதற்கு பதில் அளித்துள்ள தமிழிசை, 'ராஜ்பவன்கள் டுடோரியல் ஆக உள்ளது என வெங்கடேசன் சொல்கிறார்.... டுடோரியல் ஒன்றும் கேவலமான இடமல்ல...அதுவும் கல்வி பயிலும் புனிதமான இடம் தான்... டுடோரியலில் படிப்பவர்கள் கூட படித்து அறிவாற்றல் பெற்று தேர்வாகிறார்கள் - தங்களைப் போல அறிவாலய வாசலில் நின்று பெற்றது அல்ல. 

தேர்தல் வெற்றி மட்டுமே ஒருவருக்கு அங்கீகாரம் கிடையாது... ராஜ்பவன்கள் பயிற்சி பட்டறைகளாக இருக்கலாம்... அரண்மனை வாரிசுகளை உருவாக்கும் இடமாக இல்லை என்பதில் பெருமையே.... நேற்று வென்றவர்கள் நாளை தோற்கலாம்... நேற்று தோற்றவர்கள் நாளை வெல்லலாம்... இறுமாப்பு வேண்டாம்..

ஆளுநர் ஆவதற்கும் பல சிறப்பு தகுதிகள் வேண்டும்... அதைப்போன்ற தகுதிகளை தாங்கள் பெறப்போவதில்லை... மறுபடியும் சொல்கிறேன் இறுமாப்பு வேண்டாம்....' என்று ஆவேசமாக பதில் அளித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com