தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

டான்செட் நுழைவுத் தேர்வு: விண்ணப்பிக்க கால அவகாசம்!

அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படும், முதுநிலை பட்டப் படிப்புக்கான டான்செட் (TANCET) தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி பிப்ரவரி 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

Updated On :

அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படும், முதுநிலை பட்டப் படிப்புக்கான டான்செட் (TANCET) தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி பிப்ரவரி 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைய இருந்த நிலையில் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளில், முதுநிலை படிப்புகளான எம்பிஏ, எம்சிஏ, எம்இ, எம்டெக், எம்.ஆர்க் படிப்புகளில் சேருவதற்கு, ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தால் தமிழ்நாடு டான்செட் எனும் பொது நுழைவுத் தேர்வு (TANCET) நடத்தப்படுகிறது. 

இந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மட்டுமே முதுநிலை பட்டப்படிப்புக்கு தகுதியுடையவர்களாக கருதப்படுவர். 

அதன்படி, அரசு, அரசு உதவி பெறும் பொறியியல், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் டான்செட் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

இன்றுடன் அதற்கான விண்ணப்பத் தேதி நிறைவடைய இருந்தது. தற்போது பிப்ரவரி 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.