மெய்யான சமூக நீதி, நிலையான வளர்ச்சி, வேளாண்மை எழுச்சியே நம் இலக்கு: அண்ணாமலைதவெக அரசு இந்த ஆண்டு ரூ. 85 ஆயிரம் கோடி கடன் வாங்கப்போகிறது : அண்ணாமலைவீ தி லீடர்ஸ் அமைப்பின் இலக்கை 50% எட்டிவிட்டோம்: அண்ணாமலை2026 போல 2031-ல் ஆட்சி மாற்றம் நடக்கும்: அண்ணாமலை உறுதிஎதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி
/

குப்பைகளைத் தரம் பிரித்து வழங்காவிடில் அபராதம்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை மாநகராட்சியில் குப்பைகளைத் தரம் பிரித்து வழங்காவிடில் அபராதம் விதித்தல் போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

News image

சென்னை மாநகராட்சி - கோப்புப் படம்

Updated On :13 ஜூலை 2026, 1:05 am IST

சென்னை மாநகராட்சியில் குப்பைகளைத் தரம் பிரித்து வழங்காவிடில் அபராதம் விதித்தல் போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சியை தூய்மையான, பசுமையான பகுதியாக்கும் வகையில் திடக்கழிவுகளை உருவாக்கும் இடத்திலேயே தரம் பிரித்து வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

அதனடிப்படையில், மக்கும் கழிவுகளை பச்சை நிறத் தொட்டியிலும், மக்காத கழிவுகளை நீல நிறத் தொட்டியிலும், சுகாதாரக் கழிவுகளை சிவப்பு நிறத் தொட்டியிலும், பேட்டரி, மின் விளக்குகள் ஆகிய வீட்டு அபாயகரமான கழிவுகளை கருப்பு நிறத் தொட்டியிலும் பிரித்துப் போட்டு கழிவு சேகரிப்பு வாகனங்களில் வருவோரிடம் வழங்க வேண்டும்.

பொதுமக்கள், வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் பெருமளவு கழிவு உற்பத்தியாளா்கள் அனைவரும் தரம் பிரிக்கப்பட்ட கழிவுகளையே தூய்மைப் பணியாளா்களிடம் வழங்க வேண்டும்.

திடக் கழிவுகளை அவை உருவாக்கும் இடத்தில் தரம் பிரித்து வழங்கத் தவறினாலோ அல்லது திடக்கழிவு மேலாண்மை விதிகளை மீறினாலோ சட்டப்படியான அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.