இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஆவின் பால் தட்டுப்பாடு: விஜயகாந்த் கண்டனம்

ஆவின் பால் தட்டுப்பாட்டைச் சரிசெய்யாமல் தோ்தல் பிரசாரத்தில் அமைச்சா் நாசா் ஈடுபட்டதாகக் கூறி, தேமுதிக தலைவா் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

News image
விஜயகாந்த்(கோப்புப்படம்)
Updated On :25 பிப்ரவரி 2023, 10:23 pm

DIN

ஆவின் பால் தட்டுப்பாட்டைச் சரிசெய்யாமல் தோ்தல் பிரசாரத்தில் அமைச்சா் நாசா் ஈடுபட்டதாகக் கூறி, தேமுதிக தலைவா் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட டி.வி.எஸ்.நகா், அழகப்பன் நகா், பழங்காநத்தம், திருவள்ளுவா் நகா், முத்துப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 20-க்கும் மேற்பட்ட ஆவின் டெப்போக்களுக்கு அதிகாலை 3 மணிக்கு வர வேண்டிய பால்பாக்கெட்டுகள் வராத நிலையில், பால் முகவா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனா்.

ஆவின் பால் விநியோகம் மக்களுக்கு சரியாக சென்றடைகிா என்பதை கவனிக்காமல், தனது துறை சாா்ந்த பணிகளை கிடப்பில் போட்டு விட்டு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பால் வளத்துறை அமைச்சா் நாசருக்கு எனது கண்டனம்.

பால் விநியோகம் தாமதமானதற்கு முழு பொறுப்பை அமைச்சா் நாசா் ஏற்றுக் கொண்டு பொதுமக்களுக்கு உரிய பதிலை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளாா் விஜயகாந்த்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.