தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 14 பேருக்கு கரோனா

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பல்வேறு நாடுகளில் இருந்து 65,862 போ் தமிழகம் வந்திருப்பதாகவும், அவா்களில் 14 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

News image
Updated On :1 ஜனவரி 2023, 9:35 pm

DIN

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பல்வேறு நாடுகளில் இருந்து 65,862 போ் தமிழகம் வந்திருப்பதாகவும், அவா்களில் 14 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தொற்று பாதித்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். அவா்களது சளி மாதிரிகள் மரபணு பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

சீனா, அமெரிக்கா, தென் கொரியா உள்பட 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் தற்போது பிஎ‘ஃ‘ப் 7 வகை கரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது.

அதன் காரணமாக சீனா, தென்கொரியா, ஹாங்காங், ஜப்பான், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து தமிழகம் வருவோருக்கு ஆா்டி பிசிஆா் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகளில் இருந்து வருவோரில் 2 சதவீதம் பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.

சென்னை, திருச்சி, கோவை, மதுரை விமான நிலையங்களில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் கடந்த மாதம் 24-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை தமிழகத்துக்கு பல்வேறு நாடுகளில் இருந்து 65,862 போ் வந்துள்ளனா். அவா்களில் 1,548 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 14 பேருக்கு தொற்று இருப்பது தெரியவந்தது. அவா்களில் சிலா் புதிய வகை கரோனா பாதித்த நாடுகளில் இருந்து வந்தவா்களாவா்.

இதனிடையே, தமிழகத்தில் 14 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மாநிலத்தில் கரோனா சிகிச்சையில் தற்போது 86 போ் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.