தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

கோடியக்கரை: கடலில் மீன்பிடித்த போது விசைப்படகு மோதி மீனவர் பலி!

கோடியக்கரைக்கு அப்பால் கடலில்  மீன்பிடித்துக் கொண்டிருந்த போது விசைப்படகு மோதியதில் நாகை மீனவர் ஒருவர் திங்கள்கிழமை (ஜன.2) அதிகாலை உயிரிழந்தார்.

 உயிரிழந்த மீனவர் ராஜேந்திரன்.

Published On :

வேதாரண்யம்: கோடியக்கரைக்கு அப்பால் கடலில்  மீன்பிடித்துக் கொண்டிருந்த போது விசைப்படகு மோதியதில் நாகை மீனவர் ஒருவர் திங்கள்கிழமை (ஜன.2) அதிகாலை உயிரிழந்தார்.

நாகை மாவட்டம், செருதூரை சேர்ந்த ராஜேந்திரன்(58) எல்லப்பன் (46),முருகவேல் (40) ஆகிய 3 மீனவர்களும் 12 கடல்மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற நாகை அக்கரப்பேட்டை சேர்ந்த அனிதா என்பவருக்கு சொந்தமான விசைப்படகு மோதியதில் பைபர் படகு கடலில் முழ்கியது. 

படகு கடலில் மூழ்கத் தொடங்கியதும் மூன்று மீனவர்களும் கடலில் விழுந்து தத்தளித்தனர்.

சிறிது நேரத்திற்கு பிறகு மோதிய விசைப்படகு சம்பவ இடத்திற்கு வந்து மூன்று மீனவர்களையும் மீட்டனர். அப்போது ராஜேந்திரன் என்ற மீனவர் உயிரிழந்தது தெரிய வந்தது.

உடனடியாக அருகே உள்ள கோடியக்கரை கடற்கரைக்கு ராஜேந்திரன் உடலையும், மற்ற இரண்டு மீனவர்களான எல்லையப்பன், முருகவேல் ஆகியோரை கோடியக்கரை கடற்கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். 

வேதாரண்யம் கடலோரக் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து ராஜேந்திரன் உடலை கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.