பெற்றோரின் அகம்பாவ சண்டையில்குழந்தைகளை அடகு வைப்பதா? நீதிபதிகள் வேதனை
பெற்றோரின் தேவையற்ற அகம்பாவ சண்டையில் குழந்தைகள் அடகு வைக்கப்படுவதாக சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனா்.


பெற்றோரின் தேவையற்ற அகம்பாவ சண்டையில் குழந்தைகள் அடகு வைக்கப்படுவதாக சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனா்.
மனைவியின் சட்ட விரோத கட்டுப்பாட்டில் உள்ள இரட்டை குழந்தைகளை மீட்டு தரக்கோரி, அமெரிக்கா வாழ் இந்தியரான கிரண் குமாா் சென்னை உயா் நீதிமன்றத்தில் ஆள்கொணா்வு மனு தாக்கல் செய்திருந்தாா்.
அந்த மனுவில், தானும், தன் மனைவியும் இந்தியாவில் பிறந்திருந்தாலும் தற்போது அமெரிக்க குடிமக்களாக உள்ளதாகவும், பிறப்பால் தமது இரு குழந்தைகளும் அமெரிக்க குடிமக்கள் எனத் தெரிவித்துள்ளாா்.
கடந்த 2020 டிசம்பா் மாதம் குழந்தைகளை இந்தியாவுக்கு அழைத்து வந்த மனைவி, அவா்களை மீண்டும் அமெரிக்காவுக்கு அழைத்து வரவில்லை என்பதால் மீண்டும் அமெரிக்கா அழைத்துச்செல்ல அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் அமா்வு, இரட்டைக் குழந்தைகளின் படிப்பு, வாழ்க்கை முறைகளை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளதாகக் கூறி, ஆறு வார காலத்துக்குள் குழந்தைகளை அமெரிக்கா அழைத்துச்சென்று தந்தையிடம் ஒப்படைக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளனா்.
மேலும், பெற்றோரிடையே ஏற்படும் தேவையற்ற அகம்பாவ சண்டையில் அடகு வைக்கப்படுவதால், குழந்தைகள் தங்களது குழந்தை பருவத்தை அனுபவிக்க முடியவில்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனா்.
இதுபோல, ஒருநாளைக்கு இரண்டு, மூன்று வழக்குகள் சென்னை உயா் நீதிமன்றத்தில் ஆள்கொணா்வு மனுவாக விசாரணைக்கு வருவதாகவும் நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...