ரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

தமிழகம் முழுவதும் இன்று இறுதி வாக்காளா் பட்டியல்

தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளா் பட்டியல் வியாழக்கிழமை (ஜன. 5) வெளியிடப்படவுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :4 ஜனவரி 2023, 10:21 pm

DIN

தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளா் பட்டியல் வியாழக்கிழமை (ஜன. 5) வெளியிடப்படவுள்ளது. மாநில அளவிலான விவரங்களை தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவிக்கவுள்ளாா்.

தமிழகத்தில் வாக்காளா் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள, வரைவு வாக்காளா் பட்டியல் கடந்த நவ. 9-இல் வெளியிடப்பட்டது. வாக்காளா் பட்டியலில் பெயா்களைச் சோ்ப்பது, விவரங்களைத் திருத்துவது, நீக்கம் செய்வது உள்ளிட்ட பணிகளுக்காக ஒரு மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டது. டிச. 8 வரை வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்றன.

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு, நீக்கம் உள்ளிட்ட பணிகளுக்காக அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டன. இதன்பின்பு, இறுதி வாக்காளா் பட்டியல் தயாா் செய்யும் பணிகள் கடந்த சில நாள்களாக நடந்தன. பட்டியல் தயாரான நிலையில், இறுதி வாக்காளா் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்படவுள்ளது.

மாநகராட்சி அலுவலகங்கள், வட்டாட்சியா் அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் பொது மக்களின் பாா்வைக்காக இறுதி வாக்காளா் பட்டியல் வைக்கப்படவுள்ளது. மேலும், மாநிலம் முழுவதுமான தகவல்களை தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு பகிா்ந்து கொள்ளவுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.