திண்டுக்கல் மாவட்டத்தில் 18.84 லட்சம் வாக்காளர்கள்!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதில் 18.84 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 18.84 லட்சம் வாக்காளர்கள்!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதில் 18.84 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியர் ச.விசாகன் வியாழக்கிழமை வெளியிட்டார். அதன்படி, மாவட்டத்தில் 9.16 லட்சம் ஆண் வாக்காளர்கள், 9.68 லட்சம் பெண் வாக்காளர்கள், 214 மூன்றாம் பாலினத்தினர் என மொத்தம் 18.84 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். 

இந்த வாக்காளர் பட்டியல் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 1200 வரையறுக்கப்பட்ட மையங்களிலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் ச.விசாகன் தெரிவித்தார்.

தொகுதி வாரியாக வாக்காளர்கள் விவரம்:
பழனி: பழனி தொகுதியில் 1,34,904 ஆண்கள், 1,41,721 பெண்கள், 54 மூன்றாம் பாலினத்தினர் என மொத்தம் 2,76,679 வாக்காளார்கள் உள்ளனர்.

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் தொகுதியில் 1,15,337 ஆண்கள், 1,23,087 பெண்கள், 10 மூன்றாம் பாலினத்தினர் என மொத்தம் 2,38,434 வாக்காளார்களும் உள்ளனர். 

ஆத்தூர்: ஆத்தூர் தொகுதியில் 1,40,685 ஆண்கள், 1,52,215 பெண்கள், 25 மூன்றாம் பாலினத்தினர் என மொத்தம் 2,92,925 வாக்காளார்களும் உள்ளனர். 

நிலக்கோட்டை: நிலக்கோட்டை தொகுதியில் 1,22,253 ஆண்கள், 1,27,439 பெண்கள், 13 மூன்றாம் பாலினத்தினர் என மொத்தம் 2, 49,705 வாக்காளர்களும் உள்ளனர். 

நத்தம்: நத்தம் தொகுதியில் 1,39,035 ஆண்கள், 1,45,724 பெண்கள், 57 மூன்றாம் பாலினத்தினர் என மொத்தம் 2,84,816 வாக்காளார்களும்  உள்ளனர்.

திண்டுக்கல்: திண்டுக்கல் தொகுதியில் 1,33,946 ஆண்கள், 1,42,039 பெண்கள், 53 மூன்றாம் பாலினத்தினர் என மொத்தம் 2,76,038 வாக்காளார்களும்  உள்ளனர்.

வேடசந்தூர்: வேடசந்தூர் தொகுதியில் 1,30,125 ஆண்கள், 1,36,168 பெண்கள், 2 மூன்றாம் பாலினத்தினர் என மொத்தம் 2,66,295 வாக்காளார்களும்  உள்ளனர்.

வாக்காளர் பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வே.லதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அமர்நாத், தேர்தல் வட்டாட்சியர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com