

கோகுல்ராஜ் வழக்கில் தனக்கு எதிராக உயர்நீதிமன்றத்தின் நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சுவாதி தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில், கோகுல்ராஜ் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கை விசாரித்த மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம், தீரன் சின்னமலை பேரவைத் தலைவா் யுவராஜ் உள்ளிட்ட 10 பேரை குற்றவாளிகள் என அறிவித்து, அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து, சாகும் வரை சிறையில் இருக்கவும் தீா்ப்பளித்தது.
இதற்கிடையே, வழக்கில் முக்கிய சாட்சியான சுவாதி பிறழ்சாட்சியம் அளித்ததால், அவரை வரவழைத்து விசாரித்த நீதிபதிகள், அவர் மீது தாமாக முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தனர்.
இந்நிலையில், உயர்நீதிமன்ற கிளை தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த மேல்முறையீட்டு மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.