சென்னை: பாதியில் நிறுத்தப்பட்ட சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு பேரவையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தீர்மானம் கொண்டுவந்தார்.
சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றக் கோரி தமிழக முதல்வர் ஸ்டாலின் கொண்ட வந்த தீர்மானத்தின் மீது பேரவையில் விவாதம் தொடங்கியிருக்கிறது.
சேது சமுத்தி திட்டம் தொடர்பான விவாதத்தில் பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் பேசினார். அப்போது, ராமேஸ்வரம் என்பது நீரோட்டம் அதிகம் உள்ள பகுதி. அதனால் அங்கு சில பிரச்னை உள்ளது. ராமர் பாலத்தை எதுவும் செய்யாமல், சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றினால் வரவேற்வோம் என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து விவாதம் நடைபெற்று வருகிறது.
தமிழக சட்டப்பேரவையில் இன்று உரையாற்றிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு மத்திய அரசுக்கு அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கும்.
ரூ.2,427 கோடியில் தொடக்கப்பட்ட திட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் அதன் பயன்கள் கிடைக்கவில்லை. சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் துறைமுகங்களும் வளர்ச்சியடையும். சேது சமுத்திரத் திட்டத்தை இனியும் நிறைவேற்றவில்லையெனில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும்.
இதையும் படிக்க.. துணிவு வெறும் ஆக்ஷன் படம் மட்டும்தானா..? - திரை விமர்சனம்
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் பிரதமராக இருந்த வாஜ்பாயி சாத்தியக் கூறு ஆய்வுகளுக்கு அனுமதி அளித்தார். ஆனால், அரசியல் காரணங்களுக்காக பாஜக இந்த திட்டத்துக்கு முட்டுக்கட்டை போட்டது.
ராமேஸ்வரம் கடல் பகுதியில் இருப்பது எந்த மாதிரியான கட்டுமானம் என்பதை கூறுவது கடினம் என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார் என்றும் ஸ்டாலின் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இன்றைய செய்திகள் ஜூன் 19 - நேரலை!

ராகுல் காந்திக்கு மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!

தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!

தேசிய கீதம் குறித்து நான்தான் தீர்மானிப்பேன்: ஜே.சி.டி. பிரபாகர்!
விடியோக்கள்

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK



