திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

மேட்டூர் அணை கால்வாய் பாசனத்திற்கான தண்ணீர் நிறுத்தம்

மேட்டூர் அணை கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் 184 நாட்களுக்குப் பிறகு நிறுத்தப்பட்டது.

News image
Updated On :15 ஜனவரி 2023, 1:25 pm

DIN

மேட்டூர் அணை கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் 184 நாட்களுக்குப் பிறகு நிறுத்தப்பட்டது.

மேட்டூர் அணை கால்வாய் பாசனம் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் 45,000 ஏக்கர் பாசனம் பெறுகிறது.

ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் டிசம்பர் 15ஆம் தேதி வரை 137 நாட்களுக்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும்.

நடப்பு நீர் பாசன ஆண்டில் மேட்டூர் அணையின் நீர் இருப்பும் வரத்தும் திருப்திகரமாக இருந்ததால் விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று கால்வாய் பாசனத்திற்கு குறித்த நாளுக்கு முன்பாக ஜூலை 16ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. 137 நாட்களுக்குப் பிறகு கிழக்கு மேற்கு கால்வாய் பாசன விவசாயிகள் தண்ணீர் திறப்பு காலத்தை நீட்டிக்க கோரியதால் ஜனவரி 15ந் தேதிவரை தண்ணீர் திறப்பு காலத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

கால்வாய் பாசனத்திற்கு கூடுதலாக 47 நாட்கள் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று மாலையுடன் கால நீட்டிப்பு முடிந்ததால் 184 நாட்களுக்கு பிறகு கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு இன்று மாலை 6 மணி முதல் நிறுத்தப்பட்டது.

184 நாட்களுக்கு கால்வாய் பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து 8.40 டி.எம்.சி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.