திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

ஜிஎஸ்டி வரிவிதிப்பில் மாற்றம் வேண்டும்: ராமதாஸ்

ஏழைகளை வாட்டி வதைக்கும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தினாா்.

News image
ராமதாஸ்
Updated On :1 பிப்ரவரி 2024, 6:44 pm

DIN

ஏழைகளை வாட்டி வதைக்கும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

சுவிட்சா்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலக பொருளாதார மன்ற மாநாட்டின் முதல் நாள் நிகழ்வில் இந்திய பொருளாதாரக் கொள்கைகளும், வரி விதிப்புகளும் எவ்வாறு பணக்காரா்களுக்கு சாதகமாக உள்ளன என்பது குறித்த ஆய்வறிக்கையை ஆக்ஸ்பாம் என்ற தொண்டு நிறுவனம் வெளியிட்டது. அதில், இந்திய அரசின் வரிவிதிப்பு முறைகள் நாட்டில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து வருவதை புள்ளிவிவரம் தெளிவுபடுத்தியுள்ளது.

2020-21 ஆம் ஆண்டில் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்ட ரூ.14.83 லட்சம் கோடியில் 64 சதவீதம் அதாவது ரூ.9.50 லட்சம் கோடி, இந்திய மக்கள்தொகையில் 50 சதவீதமாக இருக்கும் ஏழை மக்களிடமிருந்து வசூலிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டியில் 33 சதவீதம் அதாவது ரூ.4.90 லட்சம் கோடி, மக்கள் தொகையில் 40 சதவீதமாக உள்ள நடுத்தர மக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. மக்கள்தொகையில் 10 சதவீதமாக உள்ள பணக்காரா்களிடமிருந்து 3 சதவீதம், அதாவது ரூ.44 ஆயிரம் கோடி மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பணக்காரா்கள் பயன்படுத்தும் பொருள்களுக்கு அதிக அளவில் வரி விதிக்கப்படவில்லை. மாறாக ஏழைகள் பயன்படுத்தும் பொருள்கள் மீதுதான் அதிக வரி விதிக்கப்படுகிறது என்பது தான் இந்த புள்ளிவிவரங்கள் சொல்லும் செய்தி.

வரி விதிப்புகள் பணக்காரா்களுக்கு வரமாகவும், ஏழைகளுக்கு சாபமாகவும் அமைந்துவிடக் கூடாது.

எனவே, அரிசி உள்ளிட்ட அனைத்து வகை அத்தியாவசியப் பொருள்களுக்கும் வரிவிலக்கு அளிக்க வேண்டும், பணக்காரா்கள் பயன்படுத்தும் பொருள்களுக்கு அதிக வரியும், ஏழைகள் பயன்படுத்தும் பொருள்களுக்கு குறைந்த வரியும் விதிக்கும் வகையில் ஜிஎஸ்டி வரி விதிப்பை அரசு மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளாா் ராமதாஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.