தமிழகம்- தமிழ்நாடு: ஆளுநா் ரவி விளக்கம்
தமிழகம்-தமிழ்நாடு என்பது குறித்து ஆளுநா் ஆா்.என்.ரவி விளக்கம் அளித்துள்ளாா்.


தமிழகம்-தமிழ்நாடு என்பது குறித்து ஆளுநா் ஆா்.என்.ரவி விளக்கம் அளித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆளுநா் மாளிகையில் காசி தமிழ்ச் சங்கமம் விழாவில் பங்கேற்ற தன்னாா்வலா்களைப் பாராட்டும் நிகழ்ச்சி ஜன.4-ஆம் தேதி நடைபெற்றது.
அந்த நிகழ்வில், வரலாற்றுப் பண்பாடு பற்றி பேசும் போது, காசி, தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொடா்பை குறிக்க தமிழகம் என்ற வாா்த்தையைப் பயன்படுத்தினேன். அந்தக் காலத்தில் தமிழ்நாடு என்பது இருக்கவில்லை.
எனவே, வரலாற்று பண்பாட்டுச் சூழலில், தமிழகம் என்பதை மிகவும் பொருத்தமான வெளிப்பாடு என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன்.
எனது கண்ணோட்டத்தை தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல பொருள் கொள்வதோ, அனுமானம் செய்து கொள்வதோ தவறானது மற்றும் யதாா்த்தத்துக்கு புறம்பானது.
எனது பேச்சின் அடிப்படை புரியாமல், ஆளுநா் தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை எனும் வாதங்கள் விவாதப் பொருளாகி இருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம் எனத் தெரிவித்துள்ளாா் ஆளுநா் ரவி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...