வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக போட்டியா? நாளை கூடுகிறது மாநில செயற்குழு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாஜகவின் மாநில செயற்குழுக் கூட்டம் நாளை கூடுகிறது.

News image
அண்ணாமலை
Updated On :19 ஜனவரி 2023, 8:42 am

DIN

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாஜகவின் மாநில செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை கூடுகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவ காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா உடல்நலக் குறைவு காரணமாக, ஜனவரி 4ஆம் தேதி காலமானார். இதைத் தொடா்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் தமாகா வேட்பாளர் யுவராஜ் போட்டியிட்ட நிலையில், தற்போதைய இடைத்தேர்தலில் யார் போட்டியிடுவது என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், கடலூரில் பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி தலைமையில் நாளை செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது குறித்து முடிவெடுக்கப்படவுள்ளது.

அதிமுக கூட்டணிக் கட்சிகள் ஒன்றிணைந்து அறிவிக்கும் வேட்பாளருக்கு பாஜக ஆதரவளிக்குமா அல்ல தனித்து போட்டியிடுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதற்கிடையே, திமுக கூட்டணி சார்பாக யார் போட்டியிடுவது என்பது குறித்தும் இதுவரை எந்த முடிவும் அறிவிக்கப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.