கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

காலிங்கராயன் சிலைக்கு மரியாதை!

ஈரோடு மாவட்டம் காலிங்கராயன் கால்வாய் வெட்டப்பட்ட நாளையொட்டி, காலிங்கராயன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

News image
Updated On :19 ஜனவரி 2023, 8:35 am

DIN

ஈரோடு மாவட்டம் காலிங்கராயன் கால்வாய் வெட்டப்பட்ட நாளையொட்டி, காலிங்கராயன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள காலிங்கராயன் பாளையத்திலிருந்து கொடுமுடி ஆவுடையார் பாறை வரை சுமார் 90 கிலோ மீட்டர் தூரம் 1282 ஆம் ஆண்டு காலிங்கராயன் மன்னரால் காலிங்கராயன் கால்வாய் வெட்டப்பட்டது.

கால்வாயின் மூலம் நேரடியாக 15,500 ஏக்கரும் மறைமுகமாக 10 ஆயிரம் ஏக்கரும் பாசன வசதி பெறுகிறது. காலிங்கராயன் கால்வாய் வெட்டப்பட்டு இன்றுடன் 741 ஆண்டுகள் ஆகியும் இதுவரை பயன்பாட்டில் இருந்து வருகிறது. 

Story image

காலிங்கராயன் கால்வாய் வெட்டப்பட்ட நாள், காலிங்கராயன் தினமாக கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து காலிங்கராயன் பிறந்த ஊரான கனகபுரம் அருகே அமைக்கப்பட்டு இருந்த அவரது திருவுருவச் சிலைக்கு உறவினர்களான சாத்தந்தை குலத்தைச் சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Story image

இந்நிகழ்ச்சியில் ராசா சுவாமி நற்பணி மன்றம் தலைவர் முத்துச்சாமி, செயலாளர் கண்ணுச்சாமி, பொருளாளர் பொன்னுச்சாமி, துணைத்தலைவர் நடராஜ் நிர்வாகிகள் மூர்த்தி, தர்மலிங்கம், ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ராஜமாணிக்கம், சாகர் பள்ளி தாளாளர் சௌந்தர்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் ஈஸ்வரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.