தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில், அதிக எண்ணிக்கையிலான உயர்கல்வி நிறுவனங்களை தொடங்குதல், அதன் வாயிலாக ஆராய்ச்சி, புதுமைப்படைப்புகள், தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் மாணவர்களின் திறன்களை வளர்த்து, வேலைவாய்ப்பினை உறுதி செய்தல், உலகளாவிய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக தகுதிவாய்ந்த திறன்மிகு இளைஞர்களை உருவாக்குதல் போன்ற பல்வேறு முன்னெடுப்புகளை நான் முதல்வன் என்ற திட்டத்தின்கீழ் எடுத்து வருவதுடன், அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்த மாணவிகள் உயர் கல்வியை பயில்வதற்கு, புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படுகிறது.