திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 883 கன அடியாகச் சரிவு

காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து சரிந்து வருகிறது. 

News image
கோப்புப்படம்
Updated On :20 ஜனவரி 2023, 2:44 am

DIN


காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து சரிந்து வருகிறது. 

வெள்ளிக்கிழமை காலை அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 883 கன அடியாக சரிந்தது. கடும் வறட்சி காலங்களில் மட்டுமே மேட்டூர் அணையின் நீர்வரத்து ஆயிரம் கன அடிக்கு கீழே சரியும். ஆனால் நடப்பு ஆண்டில் வெள்ளிக்கிழமை  மேட்டூர் அணை நீர்மட்டம் ஆயிரம் கன அடிக்கு கீழே சரிந்துள்ளது. 

வியாழக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1,022 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர் வரத்து வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 883 கன அடியாக  சரிந்துள்ளது. 

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனப்பகுதிகளில் பாசனத் தேவை குறைந்ததால் பாசனத்திற்கு  வினாடிக்கு 10,000 கன வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.  

அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் வியாழக்கிழமை காலை 108.37அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 107.79அடியாக சரிந்தது. 

அணையின் நீர் இருப்பு 75.30 டி.எம்.சியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.