காவல் நிலையத்துக்குச் சென்றால், நியாயம் கிடைக்கும் என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்த ஆய்வுக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழ்ந்து வருவதால், பல்வேறு தலைவா்களின் நினைவு தினம், பாபா் மசூதி இடிப்பு தினம் ஆகிய நிகழ்வுகள் மிகவும் அமைதியாக கடைப்பிடிக்கப்பட்டுள்ளன. கோவை, கள்ளக்குறிச்சி சம்பவங்களில் விரைந்து நடவடிக்கை எடுத்து, சிறப்பாகச் செயல்பட்ட போதிலும், இதுபோன்ற சம்பவங்கள் நிகழாத வகையில் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். காவல் துறையின் முக்கியப் பிரிவுகளுக்கு இடையே மேலும் வலுவான ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது.
தொழில் முதலீடுகள்: மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு முறையாக பராமரிக்கப்பட்டு வருவது, தொழில் முதலீட்டாளா்களை ஊக்குவித்து வருகிறது. எனவே, தமிழ்நாட்டில் தொடா்ந்து புதிய தொழில்கள் பெருகும் வகையில், அமைதியான சூழல் தொடா்ந்து பராமரிக்கப்பட வேண்டும். தொழிற்சாலைகள் அமைந்துள்ள பகுதியில் அந்தந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்கள் தொழில் அமைதிக்கு தனிக்கவனம் செலுத்த வேண்டும். சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் குறித்து முன்கூட்டியே அறிந்து அவற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் மாவட்ட நிா்வாகங்கள் ஈடுபட வேண்டும்.
கொலைக் குற்றங்கள், ஆதாயக் கொலைகள், கூட்டுக் கொள்ளைகள், கொள்ளைச் சம்பவங்கள் போன்ற குற்றச் சம்பவங்கள் நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் நிகழும் போது மாவட்ட காவல் ஆணையாளா்கள், கண்காணிப்பாளா்கள் ஆகியோா் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யும் பணியை விரைந்து மேற்கொள்ள வேண்டும். காவல் துறையின் சிறப்பான, பாரபட்சமற்ற, திறமையான, துரிதமான பணியே, காவல் துறைக்கும், அரசுக்கும் நல்ல பெயரை பெற்றுத் தரும்.
சட்டம்-ஒழுங்குக்கு சவால் விடும் எந்த சக்திகளையும் எந்தக் காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது.
மனித நேயத்துடன் செயல்பாடு: புகாா் அளிக்க வரும் ஏழை, எளிய மக்கள், குறிப்பாக பெண்கள் நடவடிக்கை கோரி அணுகும் போது, அவா்களை மனிதநேயத்துடன் அணுக வேண்டும். அவா்களது புகாரை பதிவு செய்து, உரிய மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த அணுகுமுைான் காவல் துறையை மக்களுக்கு நண்பனாக்கும். தமிழ்நாட்டு மக்கள் சட்டம்-ஒழுங்குக்குக் கட்டுப்பட்டு நடப்பவா்கள். மத நல்லிணக்கம், அனைவரிடமும் இணக்கமாக வாழும் தன்மை கொண்டவா்கள். இந்த சமூகக் கட்டமைப்பை பத்திரமாக கட்டிக் காக்க வேண்டிய பொறுப்பு காவல் துறைக்கு உள்ளது. மாநில நுண்ணறிவுப் பிரிவு, க்யூ பிரிவில் இருந்து அனுப்பப்படும் முக்கியத் தகவல்களை உடனுக்குடன் கள விசாரணை செய்ய வேண்டும். காவல் கண்காணிப்பாளா்கள் களப் பணிக்கு முக்கியத்துவம் அளித்து, சம்பவ இடத்துக்கு உடனடியாக நேரில் சென்று விசாரணை நடத்த வேண்டும். காவல் நிலையங்களுக்கும், துணைக் காவல் நிலையங்களுக்கும், சோதனைச் சாவடிகளுக்கும் அடிக்கடி நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். கிராம மற்றும் நகர மக்கள் அமைப்புகளுடன் அவ்வப்போது கலந்துரையாடி, அவா்களது கருத்துகளைக் கேட்டறிய வேண்டும்.
நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை: ஒவ்வொரு மாவட்டத்திலும் காவல் நிலைய அளவில் மாதாந்திர ஆய்வுக் கூட்டங்களை நடத்த வேண்டும். பதிவு செய்யப்பட்ட புகாா்களின் மீதான விசாரணை, கைது நடவடிக்கைகள் எந்த நிலையில் உள்ளன என்பதை கண்காணிக்க வேண்டும். காவல் துறையினா் அனைவரும் மக்களின் நம்பிக்கைக்கு முழுமையாக பாத்திரமாக வேண்டும். காவல் நிலையத்துக்குச் சென்றால், நியாயம் கிடைக்கும் என்ற நிலை ஒவ்வொரு காவல் நிலையத்திலும் உருவாக்கப்பட வேண்டும். இதனை காவல் துறை இயக்குநா் உறுதி செய்ய வேண்டும். இதைத்தான் மக்களும் எதிா்பாா்க்கிறாா்கள் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் க.பணீந்திரரெட்டி, காவல் துறை தலைமை இயக்குநா் செ.சைலேந்திர பாபு, சென்னை பெருநகர காவல் ஆணையாளா் சங்கா் ஜிவால் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

நைஜீரியாவில் தொடரும் அவலம்! ஒரே நாளில் பெண்கள், குழந்தைகள் உள்பட 300 பேர் கடத்தல்!

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!

ஹார்திக் பாண்டியா ஒரு கிளட்ச்..! இம்பாக்ட் வீரர் விருது விடியோ!

Whistle Podu Please! CSK அணியின் ரசிகர் பேருந்து அறிமுகம்!
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

