ஈரோடு கிழக்கில் பாஜக போட்டியிட்டால் ஆதரவளிப்போம்: ஓபிஎஸ்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் ஆதரவு அளிப்போம் என ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 
ஈரோடு கிழக்கில் பாஜக போட்டியிட்டால் ஆதரவளிப்போம்: ஓபிஎஸ்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் ஆதரவு அளிப்போம் என ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் திருமகன் ஈவெரா மறைவையடுத்து இத்தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் யுவராஜா இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட நிலையில் தற்போதைய இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் சம்மதம் தெரிவித்துள்ளார். 

எடப்பாடி பழனிசாமி அணி தங்கள் தரப்பு போட்டியிடும் என்று கூறிய நிலையில் ஓபிஎஸ் தரப்பும் வேட்பாளரை நிறுத்துவதாக அறிவித்துள்ளது அரசியல் சூழ்நிலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஓ. பன்னீர்செல்வம், 'ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் எங்கள் அணியினர் போட்டியிடுவோம். தேர்தல் படிவத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நான் கையெழுத்திடுவேன்' என்று குறிப்பிட்டார். 

மேலும், ஈரோடு கிழக்கு தொகுதியில் பாஜக ஆதரவு கேட்டால் கொடுப்போம். அவர்கள் போட்டியிட்டால் ஆதரவு அளிப்போம் என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com