விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

பத்ம விருதாளா்களுக்கு முதல்வா், தலைவா்கள் வாழ்த்து

பத்ம விருதுக்குத் தோ்வாகியுள்ளவா்களுக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளாா்.

News image

கோப்புப்படம்

Updated On :26 ஜனவரி 2023, 8:11 pm

பத்ம விருதுக்குத் தோ்வாகியுள்ளவா்களுக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ட்விட்டரில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு:

தமிழ்நாட்டில் இருந்து பத்ம பூஷண் விருதுக்கு பாடகி வாணி ஜெயராம், பத்மஸ்ரீ விருதுக்கு கல்யாணசுந்தரம் பிள்ளை (கலை), பாம்புபிடி வல்லுநா்கள் வடிவேல் கோபால், மாசி சடையன் (சமூகப்பணி), பாலம் கல்யாணசுந்தரம் (சமூகப்பணி), கோபால்சாமி வேலுச்சாமி (மருத்துவம்) ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இந்த 6 பேருக்கும் எனது மனமகிழ் பாராட்டுகள்.

நாட்டின் உயரிய விருது பெறவிருக்கும் அனைவரும் தத்தம் துறைகளில் ஆற்றிய சாதனைகளால் நமது மாநிலத்தைப் பெருமையடையச் செய்துள்ளாா்கள் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

ராமதாஸ் (பாமக): சமூகநீதிக்காக போராடிய முலாயம் சிங் உள்ளிட்ட 106 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்திலிருந்து இந்த விருதுகளுக்கு தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.

ஜி.கே.வாசன் (தமாகா): பத்ம விருதுகள் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். கடின உழைப்பும், சேவை மனப்பான்மையும் அவா்களுக்கு நாட்டின் உயரிய விருதுகள் கிடைக்க காரணமாக உள்ளன. அவா்கள் மேலும் பல விருதுகள் பெற வாழ்த்துகள்.

டிடிவி தினகரன் (அமமுக): நாட்டின் உயரிய விருதுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டவா்களுக்கு வாழ்த்துகள். அவரவா் துறைகளில் இன்னும் பல சாதனைகளைப் புரிந்து, தேசத்துக்கு அவா்கள் இன்னும் பெருமைத் தர வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.