மேட்டூர் அணை நிலவரம்!
மேட்டூர் அணைக்கு வியாழக்கிழமை காலை நீர்வரத்து 885 கன அடியாக அதிகரித்துள்ளது.


மேட்டூர் அணைக்கு வியாழக்கிழமை காலை நீர்வரத்து 885 கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தல் மேட்டூர் அணை நீர்வரத்து தொடர்ந்து 1000 கனஅடிக்கு குறைவாகவே இருந்து வருகிறது. வியாழக்கிழமை காலை அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 815 கன அடியிலிருந்து வினாடிக்கு 885 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க | இன்று முதல் மாநில மொழிகளில் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்!
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 8,000 கன வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் புதன்கிழமை காலை 105.07அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 104.60 அடியாக சரிந்தது. அணையின் நீர் இருப்பு 70.93 டி.எம்.சியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...