ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணியாளா் தேர்வு தொடங்கியது!

ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணியாளா் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று (ஜன.29) தொடங்கியது. 

News image
கோப்புப் படம்
Updated On :29 ஜனவரி 2023, 5:43 am

DIN

ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணியாளா் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று (ஜன.29) தொடங்கியது. 

இந்தத் தோ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி.,) செய்துள்ளது.

இதற்கான தோ்வு அறிவிக்கையை கடந்த ஆண்டு செப்டம்பரில் தோ்வாணையம் வெளியிட்டது. 

அதன்படி, காலியாக உள்ள 217 புள்ளியியல் பணியாளா் இடங்களுக்கான எழுத்துத் தோ்வுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்தத் தோ்வை எழுத மொத்தம் 35,286 போ் விண்ணப்பம் செய்துள்ளனா். அவா்களில் ஆண்கள் 11,870 போ். பெண்கள் 23,416 போ்.

இதையும் படிக்க: ஈரானில் நிலநடுக்கம்: 7 பேர் பலி

இந்தத் தோ்வுக்காக 15 மாவட்டங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 126 இடங்களில் தோ்வுகள் நடைபெறுகின்றன. 

சென்னையில் 18 இடங்களில் நடைபெறும் இந்தத் தோ்வை 4 ஆயிரத்து 608 போ் எழுதுகின்றனர் .

தோ்வு தாள் 1 மற்றும் தாள் 2 என இரண்டு பிரிவுகளாக நடக்கிறது. புள்ளியியல் அல்லது கணிதத்தில் பட்டப் பாடத்தை அடிப்படையாகக் கொண்டு முதல் தாளில் கேள்விகள் கேட்கப்படும். இரண்டாவது தாள் பொதுவானதாக இருக்கும். அதாவது, தமிழ் தகுதித் தோ்வு, பொது அறிவு போன்ற அம்சங்களைக் கொண்ட கேள்விகள் இடம்பெற்றிருக்கும். தோ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், இன்று தமிழகம் முழுவதிலும் 15 மாவட்டங்களில் 126 மையங்களில் இந்தத் தேர்வு தொடங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.