நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

தமிழ்நாட்டில் 30-க்கு அதிகமான  ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :30 ஜனவரி 2023, 3:58 pm

DIN

தமிழ்நாட்டில் 30-க்கு அதிகமான  ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 
நெல்லை மாவட்ட ஆட்சியராக கே.பி.கார்த்திகேயன் நியமனம். தென்காசி ஆட்சியராக ரவிசந்திரன், விருதுநகர் ஆட்சியராக ஜெயசீலன், கிருஷ்ணகிரி ஆட்சியராக தீபக் ஜேகப், விழுப்புரம்  ஆட்சியராக பழனி நியமனம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று கன்னியாகுமரி ஆட்சியராக ஸ்ரீதர், பெரம்பலூர் ஆட்சியராக கற்பகம், தேனி ஆட்சியராக ஷாஜிவாணா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

கோவை ஆட்சியராக கிராந்திகுமார், திருவாரூர் ஆட்சியராக சாருஸ்ரீ, மயிலாடுதுறை ஆட்சியராக மகாபாரதி நியமிக்கப்பட்டுள்ளார். 

விழுப்புரம் ஆட்சியராக இருந்த மோகன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.