மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

காரைக்கால் மாங்கனித் திருவிழா: பிச்சாண்டவர் வீதியுலாவில் மாங்கனி இறைத்து பக்தர்கள் வழிபாடு 

காரைக்கால் மாங்கனித் திருவிழாவில் ஸ்ரீ பிச்சாண்டவர் வீதியுலாவில், மாங்கனிகளை இறைத்து பக்தர்கள் வழிபட்டனர். 

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 11:48 am

DIN

காரைக்கால் மாங்கனித் திருவிழாவில் ஸ்ரீ பிச்சாண்டவர் வீதியுலாவில், மாங்கனிகளை இறைத்து பக்தர்கள் வழிபட்டனர்.

63 நாயன்மார்களில் ஒருவரான புனிதவதியார் எனும் காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாற்றை விளக்கி, காரைக்கால் ஸ்ரீ சுந்தராம்பாள் சமேத கைலாசநாதர் கோயில் சார்பில் மாங்கனித் திருவிழா ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு மாப்பிள்ளை அழைப்பு (பரமத்தர்), சனிக்கிழமை அம்மையார் திருக்கல்யாணம், மாலை கைலாசநாதர் கோயிலில் ஸ்ரீ பிச்சாண்டவருக்கு வெள்ளை சாற்று அலங்காரம் ஆகியவை நடைபெற்றன. 

Story image

3-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணிக்கு பிச்சாண்டவர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு, காலை 10.30 மணியளவில் சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் பவழக்கால் சப்பரத்தில் அம்மையார் கோயிலுக்கு அமுது படையலுக்கு புறப்படும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. வேதபாராயணம் முழங்க, சிறப்பு மேளம், நாகசுரம், ராஜவாத்தியங்கள் இசைக்க காரைக்கால் நகரின் முக்கிய வீதிகளில் சப்பரம் வீதியில் செல்கிறது. சப்பரம் புறப்பாடு தொடங்கியது முதல் பின்னால் வரும் பக்தர்கள் மீது ஒவ்வொரு வீடுகள், கட்டடங்களின் மேல் தளத்தில் நின்றவாறு மக்கள் மாங்கனிகளை இறைத்தனர்.

Story image

திருமணமாக வேண்டும், குழந்தை பாக்கியம் வேண்டும் உள்ளிட்ட வேண்டுதல் செய்துகொள்ளும் விதமாகவும், நேர்த்திக் கடன் நிவர்த்தியாகவும் பக்தர்கள் இவ்வாறு செய்கின்றனர். இறைக்கப்படும் மாங்கனியை பிடித்து இறைவனின் பிரசாதமாக கருதி வீட்டுக்கு பக்தர்கள் எடுத்துச் சென்றனர். பக்தர்கள் அர்ச்சனை தட்டில் பட்டு வஸ்திரம், மாங்கனி வைத்து பிச்சாண்டவரை வழிபட்டனர். காரைக்கால் நகரின் பாரதியார் வீதி, கென்னடியார் வீதி, மாதாகோயில் வீதி, லெமேர் வீதி வழியாக பவழக்கால் சப்பரம் மாலை அம்மையார் கோவிலை சென்றடைந்ததும், புனிதவதியார் (காரைக்கால் அம்மையார்) பிச்சாண்டவரை எதிர்கொண்டு அழைக்கும் வைபவம் நடத்தப்பட்டு, அமுதுபடையல் வழிபாடு நடைபெறுகிறது. 

Story image

காரைக்கால் மட்டுமல்லாது பிற ஊர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருவிழா காண வந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.