உழவர் சந்தையில் இன்று 1,592 மெட்ரிக் டன் தக்காளி விற்பனை!

வேளாண்மைத் துறை திட்டங்கள் மற்றும் தக்காளி உள்ளிட்ட இதர காய்கறிகள் விலை உயர்வு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜூலை 3) நடைபெற்றது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

உழவர் சந்தையில் இன்று 1,592 மெட்ரிக் டன் தக்காளி விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

வேளாண்மைத் துறை திட்டங்கள் மற்றும் தக்காளி உள்ளிட்ட இதர காய்கறிகள் விலை உயர்வு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜூலை 3) நடைபெற்றது.

உழவர் நலத் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், எதிர்காலத்தில் தக்காளி மற்றும் இதர காய்கறிகளின் விலையேற்றம் கோடை காலத்திலும் நிகழாதவண்ணம் முன்கூட்டியே தொடர் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. 

மேலும், தக்காளி பயிரிடும் பரப்பை அதிகப்படுத்துவது தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதில், இன்றுமட்டும் உழவர் சந்தை மூலம் 1,592 மெட்ரிக் டன் தக்காளி விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. 

இந்தக் கூட்டத்தில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச் செயலாளர் சி.சமயமூர்த்தி, சர்க்கரைத் துறை ஆணையர் சி. விஜய ராஜ்குமார், வேளாண்மைத் துறை ஆணையர் முனைவர். எல். சுப்ரமணியன், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் டாக்டர். ஆர். பிருந்தா தேவி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com