வாலாஜா அருகே குடிபோதையில் மனைவியிடம் தகராறு ஈடுபட்டதால், மனைவி கட்டையால் தாக்கியதில் கணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அருகே உள்ள வி.சி.மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் (40). இவரது மனைவி பானுமதி (34), இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.
இவர்களுக்கு திருமணம் ஆகி 14 ஆண்டுகள் ஆன நிலையில், தேவராஜ் தொடர்ந்து குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் சண்டை போட்டுக்கொண்டு பானுமதி தனது தாய் வீடான சின்னதகர குப்பத்தில் இருந்து வந்துள்ளார்.
அங்கு வந்த தேவராஜ் குடித்துவிட்டு திங்கள்கிழமை இரவு தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பானுமதி, தனது கனவர் தேவராஜை கட்டையால் அடித்ததில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதையும் படிக்க: கிண்டியாரே தயாரா? சேலம் திமுகவினர் போஸ்டரால் பரபரப்பு!
இச்சம்பவம் குறித்து வாலாஜா காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நாளைய மின்தடை: ஜோலாா்பேட்டை, நாட்றம்பள்ளி, பச்சூா்

வனம் காக்கும் முன்களப் பணியாளர்கள்!

ஜூன் 21இல் நீட் மறுதோ்வு மாணவா்களுக்கு டிடிசி, கிளஸ்டா் பேருந்துகளில் இலவச பயணம்

பாகிஸ்தானை வென்றது தென்னாப்பிரிக்கா
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



