தூத்துக்குடி அருள்மிகு வரத விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு

தூத்துக்குடி அருள்மிகு வரத விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் அமைச்சர் கீதா ஜீவன் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
தூத்துக்குடி அருள்மிகு வரத விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
Published on
Updated on
1 min read

தூத்துக்குடி: தூத்துக்குடி அருள்மிகு வரத விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் அமைச்சர் கீதா ஜீவன் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

தூத்துக்குடியில், இரண்டாம் கேட் ரயில்வே பகுதியில் இருந்த அருள்மிகு ஸ்ரீ வரத விநாயகர் திருக்கோயில் இட்டை ரயில் பாதை போடப்பட்டதன் காரணமாக அங்கிருந்து அகற்றப்பட்டு கதிரேசன் கோயில் தெரு பகுதியில் புதிதாக கட்டபட்டது. இந்த ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை காலையில் நடைபெற்றது.

கும்பாபிஷேக நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன்.

முன்னதாக, கணபதி ஹோமம், யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து புனித நீர் கலசங்களில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்பு கோபுர கலசங்களுக்கு சிறப்பு பூஜைக்குப் பின்பு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. பின்னர் கோபுர கலசங்கள் மற்றும் விநாயகருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்.

இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், திமுக நகரச் செயலர் ஆனந்த சேகரன் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து ஸ்ரீ வரத விநாயகரை வழிபட்டு சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com