ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சிதம்பரம் தக்ஷிண காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

சிதம்பரம் தக்ஷிண காளியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் காலை 10 மணிக்கு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். 

News image
Updated On :6 ஜூலை 2023, 6:42 am

DIN

சிதம்பரம் சபாநாயகர் தெருவில் வீற்றுள்ள தக்ஷிண காளியம்மன் கோயிலில்  இன்று காலை 10 மணிக்கு மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். 

சிதம்பரம் தெற்கு கோபுர வாயில் எதிரே உள்ள சபாநாயகர் தெருவில் பரமனது கட்டளையால் நகரை காக்கும் தேவதைகளும் பிரதானமாக விளங்குகிறார் தக்ஷிண காளியம்மன். பிரசித்தி பெற்ற இக்கோயில் திருப்பணி செய்யப்பட்டு மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜூன் 29-ம் தேதி வியாழக்கிழமை கூஷ்மாண்ட ஹோமம், நடராஜர் அனுக்ஜை, மதுபர்க்கம், தனபூஜையுடன் யாகசாலை பூஜை தொடங்கியது. 

30-ம் தேதி மகா கணபதி ஹோமமும். ஜூலை 1-ம் தேதி நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, ஜூலை 2-ம் தேதி காலை தக்ஷிண காளியம்மனுக்கு ப்ரஸன்னாபிஷேகம், கலாகர்ஷணம், கடங்கள் யாகசாலை பிரவேசம், மாலை 1-ம் கால யாகசாலை பூஜை பூர்ணாஹூதி, மகாதீபராதனை நடைபெற்றது. 

Story image

ஜூலை 3-ம் தேதி காலை 2-ம் கால யாகபூஜையும், மாலை 3-ம் கால யாகபூஜையும், ஜூலை 4-ம் தேதி காலை 4-ம் கால யாகபூஜையும், மாலை 5-ம் கால யாகபூஜையும், ஜூலை 5-ம் தேதி காலை 6-ம் கால யாகபூஜையும், மாலை 7-ம் கால யாகபூஜையும், இரவு 8-ம் கால யாகபூஜை மற்றும் பூர்ணாஹூதி மகா தீபாராதனை நடைபெற்றது.

ஜூலை 6-ம் தேதி வியாழக்கிழமை காலை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி கோ பூஜை, அஸ்ப பூஜை, கஜ பூஜை நடைபெற்ற பின்னர் யாத்ராதானம் நடைபெற்று கடம் புறப்பட்டு கோயில் விமானத்தை அடைந்து 10 மணிக்கு பொதுதீட்சிதர்கள் கலசத்திற்கு கும்ப நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர். 

பின்னர் இரவு மகாபிஷேகமும், அம்பாள் வீதி உலாவும் நடைபெற்றது. ஜூலை 7-ம் தேதி முதல் தொடர்ந்து 48 தினங்கள் மண்டலாபிஷேகம் நடைபெறுகிறது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோயில் டிரஸ்டி வி.எஸ்.ராஜசேகர தீட்சிதர் மற்றும் திருப்பணி கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.