நீலகிரியில் கனமழை எச்சரிக்கை: உதவி எண்கள் அறிவிப்பு!

கடந்த இரண்டு நாள்களாக நீலகிரி, கோவையில் கனமழை பெய்துவரும் நிலையில், மழை பாதிப்புகள் குறித்து அவசர தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 
நீலகிரியில் கனமழை எச்சரிக்கை: உதவி எண்கள் அறிவிப்பு!

கடந்த இரண்டு நாள்களாக நீலகிரி, கோவையில் கனமழை பெய்துவரும் நிலையில், மழை பாதிப்புகள் குறித்து அவசர தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

நீலகிரி மாவட்டத்தில் நடப்பாண்டு பருவமழை தாமதமாக தொடங்கிய நிலையில் கடந்த மூன்று நாள்களாக கனமழை பெய்து வருகிறது. 

கடந்த 24 மணி நேரத்தில் அவலாஞ்சியில் 20 செ.மீ மழையும், பவானியில் 11 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. மஞ்சூர், ஊட்டி, கூடலூர், பந்தலூர் பகுதிகளில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

அவலாஞ்சி அணையில் 3 அடிக்கு தண்ணீர் உயர்ந்துள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக அம்மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, ஜூலை 6-ம் தேதியான இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் இன்று கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. 

மழை பாதிப்புகள் குறித்து தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 1077 என்ற எண்ணில் மக்கள் தொடர்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com