எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சென்னையில் தோனி: ரசிகர்கள் உற்சாக வரவேற்பு

தனது நிறுவனம் தயாரிக்கும் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக தோனி சென்னை வந்தடைந்தார்

News image
கோப்புப் படம்.
Updated On :9 ஜூலை 2023, 3:00 pm

DIN

தனது நிறுவனம் தயாரிக்கும் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக தோனி சென்னை வந்தடைந்தார்

சிஎஸ்கே அணியின் கேப்டனாக உள்ள தோனி மீது தமிழ் ரசிகர்கள் அதிக அளவிலான அன்பைச் செலுத்தி வருகிறார்கள். இதற்கு நன்றி செலுத்தும் விதமாக தோனி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் முதல் படத்தைத் தமிழில் தயாரிக்க முடிவு செய்திருந்தனர் தோனியும் சாக்‌ஷியும். 

அதன்படி ‘எல்ஜிஎம்’ (லெட்ஸ் கெட் மேரிட்) என்கிற படத்தினை தோனியின் நிறுவனம் தயாரிக்கிறது. ரமேஷ் தமிழ்மணி இயக்கும் இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், இவனா, நதியா, வினோதினி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  
படத்திற்கு விஷ்வஜித் என்ற மலையாள இசையமைப்பாளர் இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே, படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில், படத்தின் இசை மற்றும் டிரைலரை தோனியும் தோனியின் மனைவி சாக்‌ஷியும் சேர்ந்து ஜூலை 10ஆம்தேதி அதாவது நாளை வெளியிட உள்ளனர். இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக தோனி இன்று சென்னை வந்தடைந்தார். 

சென்னை விமான நிலையம் வந்திறங்கிய அவருக்கு அங்கு கூடியிருந்த ரசிகர்கள் உற்காக வரவேற்பு அளித்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.