தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வர் விஜய்யுடன் அன்புமணி சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை மீண்டும் தில்லி பயணம்!பணமோசடி வழக்கு: பினராயி விஜயன் மகளுக்கு அமலாக்கத் துறை சம்மன்!மாநிலங்களவைத் தேர்தல்: பிரவீண் சக்ரவர்த்தியின் வேட்புமனு ஏற்பு!பேரிடர் நிதி ரூ. 1,000 கோடி முன்கூட்டியே வரவு! அமைச்சர் செங்கோட்டையன்
/

டாஸ்மாக் திறக்கப்படும் நேரத்தில் மாற்றமில்லை: அமைச்சர் முத்துசாமி

தமிழகத்தில் செயல்படும் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கும் நேரத்தில் மாற்றமில்லை என்று அமைச்சர் முத்துசாமி அறிவித்துள்ளார்.

News image
Updated On :12 ஜூலை 2023, 5:48 pm IST


சென்னை: தமிழகத்தில் செயல்படும் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கும் நேரத்தில் மாற்றமில்லை என்று  மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி அறிவித்துள்ளார்.

இரண்டு நாள்களுக்கு முன்பு, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி, கூலி வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள், காலை 7 மணி முதல் 9 மணி வரை டாஸ்மாக் கடையைத் திறக்குமாறு கோரிக்கை வைத்திருப்பதாகத் தெரிவித்திருந்தார். இது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அரசு தரப்பில் ஆலோசனை மட்டும் நடத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதனால், டாஸ்மாக் கடைகள் காலையிலேயே திறக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகின. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்ப்புகளை பதிவு செய்திருந்தனர்.

இந்த நிலையில், இன்று மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி, டாஸ்மாக் கடைகள் வழக்கம் போல் நண்பகல் 12 மணிக்குத் திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூடப்படும். டாஸ்மாக் ஊழியர்களின் பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மதுபாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்குவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

மது குடிப்போர் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பதே அரசின் எண்ணம். 90  எம்.எல். பாட்டிலில் மது விற்பனை செய்வது குறித்து இதுவரை அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதனால், டாஸ்மாக் மதுக்கடைகள் காலையிலேயே திறக்கப்படும் என்று வெளியான தகவலுக்கு அமைச்சர் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.