குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

கட்சியில் மீண்டும் சேர்த்துக்கொள்வதா? இந்த 3 பேருக்கு பொருந்தாது!

கட்சியில் மீண்டும் சேர்த்துக்கொள்வது தொடர்பான அறிவிப்பு இந்த 3 பேருக்கு பொருந்தாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Published On :2 பிப்ரவரி 2024, 12:49 am IST

கட்சியில் மீண்டும் சேர்த்துக்கொள்வது தொடர்பான அறிவிப்பு இந்த 3 பேருக்கு பொருந்தாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் அமைதி பூங்காவாக இருந்ததாகவும், தற்போது அமளி பூங்காவாக உள்ளதாக கூறினார். 

தமிழகத்தில், பெட்ரோல் குண்டு கலாசாரம் தலைத்தூக்கியுள்ளது,  ஆளும் கட்சி எம்.எல்.ஏ.வுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ள நிலையில் சாதாரண குடிமக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும் என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், மூலகொத்தளம் குடிசை மாற்று வாரிய கட்டிடம், அதிமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. அதற்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி தாங்கள் கட்டியதை போல சித்தரித்துள்ளதாக குற்றம் சாட்டினார். மூலகொத்தளம் குடிசை மாற்று வாரிய கட்டிடம் அப்பகுதியில் உள்ள ராமதாஸ் நகர் மக்களுக்காக தான் கட்டப்பட்டதாகவும், அவர்களுக்கு அந்த வீடுகளை ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தினார். 

செந்தில் பாலாஜியை பாதுகாக்க அரசு பல முயற்சிகளை செய்து வருகிறது. கட்சியில் மீண்டும் சேர்த்துக்கொள்வது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிவிப்பு ஓ. பன்னீர் செல்வம், டிடிவி. தினகரன், சசிகலாவுக்கு பொருந்ந்தாது. 

திமுக கூட்டணியில் கடுமையான அதிருப்தி நிலவுகிறது. அடுத்த 9 மாதங்களில் என்ன வேணுமானாலும் நடக்கலாம். தோற்பவர்களுடன் பயணிக்க யாரும் விரும்ப மாட்டார்கள். அதனால் திமுக அணியில் இருப்பவர்கள் எங்கள் அணிக்கு வர வாய்புள்ளது எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.