தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

முன்னாள் டிஜிபி பெயரில் பேஸ்புக் மூலமாக மோசடி!

தாம்பரம் மாநகர காவல்துறையின் முன்னாள் காவல் ஆணையர் எம். ரவி பெயரில் சமூக ஊடகங்கள் மூலமாக மோசடி நடைபெறுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சைபர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News image
Updated On :13 ஜூலை 2023, 10:12 am

DIN

சென்னை: தாம்பரம் மாநகர காவல்துறையின் முன்னாள் காவல் ஆணையர் எம். ரவி பெயரில் சமூக ஊடகங்கள் மூலமாக மோசடி நடைபெறுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சைபர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாவது: 

சென்னை நீலாங்கரை பகுதியைச் சேர்ந்தவர் எம்.ரவி. இவர், தமிழக காவல்துறையில் டிஜிபி ஆக இருந்து கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார். கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னை பெருநகர காவல் துறையைப் பிரித்து புதிதாக தாம்பரம் மாநகர காவல்துறை உருவாக்கப்பட்டபோது, தாம்பரம் மாநகர காவல்துறையின் முதல் காவல் ஆணையராக ரவி நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Story image

பணி ஓய்வுக்குப் பின்னர் ரவி, சமூக ஊடகங்களில் தீவிரமாக இயங்கி வருகிறார். முக்கியமாக, உடற்பயிற்சி தொடர்பாகவும் இளைஞர்களை உத்வேகப்படுத்தும் நல்ல பதிவுகளை பதிவிட்டு வருகிறார். இதனால் சமூக ஊடகங்களில் ஏராளமான இளைஞர்கள், காவல்துறையினர் அவரை பின் தொடர்ந்து வருகின்றனர். 

முன்னாள் டிஜிபி பெயரில் போலி கணக்கு

முன்னாள் டிஜிபி பெயரில் போலி கணக்கு

இந்நிலையில் ஃபேஸ்புக்கில் ரவியின் புகைப்படத்தை வைத்து அவரது பெயரிலே போலியான கணக்கை உருவாக்கி ஒரு கும்பல் பண மோசடியில் இறங்கியுள்ளது.

Story image

மேலும், சமீபத்தில் அந்த மோடியில் ஈடுபட்ட நபர்கள், போலியான கணக்கு மூலம் ஒருவரிடம் இருந்து பர்னிச்சர் பொருள்களை வாங்கி உள்ளனர். அதை பணம் கொடுத்து வாங்குமாறு ரவிக்கு தகவல் அனுப்பி உள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த முன்னாள் டிஜிபி ரவி, உடனடியாக இதுகுறித்து சென்னை சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.