உலக அளவில் அறிவை வளர்த்துக்கொள்ள புத்தகங்கள் தான் பயனுள்ளதாக இருக்கும்: அமைச்சா் அன்பில் மகேஸ்

பொழுதுபோக்கு இல்லாமல் உலக அளவில் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றால் புத்தகங்கள் தான் பயனுள்ளதாக இருக்கும்
உலக அளவில் அறிவை வளர்த்துக்கொள்ள புத்தகங்கள் தான் பயனுள்ளதாக இருக்கும்: அமைச்சா் அன்பில் மகேஸ்
Published on
Updated on
1 min read

தஞ்சாவூர்: பொழுதுபோக்கு இல்லாமல் உலக அளவில் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றால் புத்தகங்கள் தான் பயனுள்ளதாக இருக்கும் என தஞ்சையில் புத்தகத் திருவிழா தொடங்கி வைத்த அமைச்சர்  அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

தஞ்சாவூா் அரண்மனை மைதானத்தில் மாவட்ட நிா்வாகம், பொது நூலக இயக்ககம் சாா்பில் புத்தகத் திருவிழா வெள்ளிக்கிழமை (ஜூலை 14) முதல் ஜூலை 24 ஆம் தேதி வரை 11 நாட்கள் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. 

இந்த விழாவை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சட்டப்பேரவை கொறடா கோவி.செழியன் உள்ளிட்டோர் வெள்ளிக்கிழமை 11 மணியளவில் தொடங்கி வைத்தனர். 

இதில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் முதல் நாளே கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான புத்தங்களை வாங்கிச் சென்றனர். இதில் பல்வேறு பதிப்பகங்கள் சார்பில் 110 அரங்குகள் அமைக்கப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. 

இதில் போட்டி தேர்வு புத்தகங்கள்,  மாணவர்களுக்கான பொழுதுபோக்கு புத்தகங்கள் உள்ளிட்ட 2 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. முதல் முறையாக காவல் துறை சார்பில் புத்தக தானம் செய்யும் பெட்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஏராளமான சிறை கைதிகளுக்காக புத்தகங்களை தானமாக வழங்கவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, புத்தகத் திருவிழா இலக்கிய விழாக்கள் நடத்துவது அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்க பயனுள்ளதாக இருக்கும். மக்களின் பொழுதுபோக்கு இல்லாமல் உலக அளவில் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றால் புத்தகங்கள் தான் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com