தில்லியில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் நேரில் அழைப்பு விடுத்துள்ளார்.
மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் சென்னை வந்துள்ள நிலையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.
இதன் தொடர்ச்சியாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.
அப்போது தில்லியில் வருகிற செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அப்போது தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
ஜி20 அமைப்பின் தலைவராக இந்தியா கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி பொறுப்பேற்றது. இதையொட்டி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் 200க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன. இறுதியாக ஜி20 தலைவர்கள் உச்சி மாநாடு தில்லியில் செப்டம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சமையல் எரிவாயு தட்டுப்பாடு: நாடாளுமன்ற வளாகத்தில் எதிா்க்கட்சிகள் ஆா்ப்பாட்டம்
எல்பிஜி நெருக்கடி: தில்லி திருமணங்களில் உணவு தயாரிப்பு செலவுகள் 10-20 சதவீதம் உயரக்கூடும்!

செங்கம் அரசுக் கல்லூரிக்கு ரூ.18 கோடியில் புதிய கட்டடம் கட்டும் பணி: அடிக்கல் நாட்டி ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

திமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும்
வீடியோக்கள்

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

