ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

காமராஜர் பிறந்தநாள்: அரசுப்பள்ளி விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

காமராஜர் பிறந்தநாளையொட்டி சென்னை நங்கநல்லூர் அரசுப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். 

News image
Updated On :15 ஜூலை 2023, 3:40 am

DIN

காமராஜர் பிறந்தநாளையொட்டி சென்னை நங்கநல்லூர் அரசுப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். 

மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் இன்று தமிழ்நாடு முழுவதும் அரசுப்பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 

இதையொட்டி சென்னை நங்கநல்லூர் அரசுப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். பள்ளியில் வைக்கப்பட்டிருந்த காமராஜரின் திருவுருவப்படத்திற்கு முதல்வர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

மேலும் விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழ் அகராதி புத்தகங்களை வழங்கியதுடன் தனக்கு பரிசாக வந்த  7,740 புத்தகங்களை நூலகங்களுக்கு வழங்கினார். 

இந்நிகழ்வில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், சென்னை மேயர் பிரியா ஆகியோர் கலந்துகொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.