கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பெங்களூருவில் முதல்வர் ஸ்டாலினை வரவேற்ற டி.கே.சிவகுமார்!

எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பெங்களூரு சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் விமான நிலையத்தில் வரவேற்றார்.

News image

பெங்களூருவில் முதல்வர் ஸ்டாலினை வரவேற்ற டி.கே.சிவகுமார்

Updated On :17 ஜூலை 2023, 7:17 am

பெங்களூரு: எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பெங்களூரு சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் விமான நிலையத்தில் வரவேற்றார்.

எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் கடந்த மாதம் பாட்னாவில் நடைபெற்ற நிலையில், பெங்களுருவில் காங்கிரஸ் தலைமையில் இன்றும், நாளையும் இரண்டாவது கூட்டம் நடைபெறுகிறது.

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிகார் முதல்வர் நிதிஷ் குமார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்பட 24 கட்சிகளின் தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு சென்ற தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவரும், அம்மாநில துணை முதல்வருமான டி.கே.சிவகுமார் விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினை நேரில் வரவேற்றார்.

முதல்வர் ஸ்டாலினுடன் திமுக பொருளாளரும், கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவருமான டி.ஆர்.பாலுவும் சென்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.