ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ்! புழல் சிறைக்கு மாற்றம்!!

சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்து, புழல் சிறைக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :17 ஜூலை 2023, 12:20 pm

DIN


காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, புழல் சிறைக்கு அழைத்துச்செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளார்.

இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையிலிருந்தவாறு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், தற்போது மருத்துவமனையிலிருந்து மாற்றப்பட்டுள்ளார்.

கடந்த ஜூன் 21ஆம் தேதி காவேரி மருத்துவமனையில்  செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை (பைபாஸ்) சிகிச்சை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மருத்துவமனையிலிருந்தவாறு அவர் சிகிச்சை பெற்றுவந்தார். தற்போது செந்தில் பாலாஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், மருத்துவமனையிலிருந்து மாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகத் தெரிகிறது. 

மருத்துவமனையிலிருந்து அவசர ஊர்தி வாயிலாக செந்தில் பாலாஜியை அழைத்துச்செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாக மருத்துவமனை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.