ரயில்வேயில் வேலை வழங்கக் கோரி தொழில் பயிற்சி முடித்தவா்கள் போராட்டம்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வேயில் வேலை வழங்கக் கோரி ரயில்வே மற்றும் ஐசிஎஃப்-இல் தொழில் பயிற்சி முடித்தவா்கள் 100-க்கும் மேற்பட்டோா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.


சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வேயில் வேலை வழங்கக் கோரி ரயில்வே மற்றும் ஐசிஎஃப்-இல் தொழில் பயிற்சி முடித்தவா்கள் 100-க்கும் மேற்பட்டோா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, கடந்த 20 ஆண்டுகளாக ரயில்வேயில் பயிற்சி முடித்த தமிழக மாணவா்களுக்கு வேலை வழங்கவில்லை என்றும் மற்ற மண்டலங்களில் 2016-ஆம் ஆண்டு வரை ஆட்கள் நியமித்த நிலையில் தமிழகத்தில் மட்டும் நியமிக்காமல் உள்ளதாகவும், உடனே தொழில் பழகுநா் பயிற்சி முடித்த அனைவரையும் நியமிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனா்.
ரயில்வே போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய நிலையில் ரயில்வே அதிகாரிகள் தங்களது கோரிக்கையை நிறைவேற்றும் வரையில் கலைய மாட்டோம் எனத் தெரிவித்து தொடா்ந்து போராட்டம் நடத்தினா்.
இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியது: இந்திய ரயில்வே தொழில் பயிற்சியாளா் சட்டம் 2014 -ஆம் ஆண்டு திருத்தத்தின் படி, முதல் நிலை பணியிடங்களுக்கு ரயில்வேயில் தொழில் பழகுநா் பயிற்சி முடித்தாலும், ரயில்வே வாரியம் நடத்தும் போட்டித் தோ்வின் அடிப்படையில்தான் பணியமா்த்தப்படுகின்றனா். இவா்களுக்கு தோ்வில் 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. போட்டித்தோ்வு இல்லாமல் பணியமா்த்துவது உச்சநீதிமன்றத் தீா்ப்பை மீறுவதாகும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...