புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நாடாளுமன்ற தேர்தலோடு திமுகவுக்கு எதிர்காலம் இருக்காது: செல்லூர் கே.ராஜு பேட்டி

வரும் நாடாளுமன்ற தேர்தலோடு திமுகவுக்கு எதிர்காலம் இருக்காது; அளவு கோலை மீறும் பொழுது தான் அமலாக்கத்துறை சோதனை நடத்தும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு கூறினார்.

News image
Updated On :22 ஜூலை 2023, 9:29 am

DIN

மதுரை: வரும் நாடாளுமன்ற தேர்தலோடு திமுகவுக்கு எதிர்காலம் இருக்காது; அளவு கோலை மீறும் பொழுது தான் அமலாக்கத்துறை சோதனை நடத்தும், தனக்கு வந்தால் ரத்தம் அடுத்தவனுக்கு வந்தால் தக்காளி சட்னி என்பது போல முதல்வர் பேசுகிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு கூறினார்.

மதுரை முனிச்சாலையில் ஆக. 20ல் நடைபெறவுள்ள அதிமுக மாநாடு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, செல்லூர் கே.ராஜூ, தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் ராஜ்சத்யன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் அதிமுக மாநாடு தொடர்பான ஸ்ட்டிக்கர் வாகனங்களில் ஒட்டப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, "அதிமுக வரலாற்றை  கரி கட்டையால் சுவரில் எழுதி கட்சியை வளர்த்தோம். மதுரையில் அதிமுக மாநாட்டை தொண்டர்கள் நடத்துகிறார்கள், அதிமுகவினர் குடும்பம் குடும்பமாக மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். மற்ற கட்சிகள் மாநாட்டுக்கு கூட்டத்தை கூட்டுகிறார்கள், அதிமுக மாநாட்டுக்கு தானாக சேரும் கூட்டம்.

நாடாளுமன்ற தேர்தலோடு திமுகவுக்கு எதிர்காலம் இருக்காது, அளவு கோலை மீறும் பொழுது தான் அமலாக்கத்துறை சோதனை நடத்தும், தனக்கு வந்தால் ரத்தம் அடுத்தவனுக்கு வந்தால் தக்காளி சட்னி என்பது போல முதல்வர் பேசுகிறார்.

உப்பு தின்பவன் தண்ணீர் குடித்தாக வேண்டும், தவறு இழைத்தவன் தண்டனை அனுபவித்தாக வேண்டும், அமலாக்கத்துறை விசாரணையில் பாகுபாடு காட்டவில்லை, தவறு செய்தவர்களிடம் மட்டுமே அமலாக்கத்துறை விசாரணை நடத்துகிறது என செல்லூர் கே.ராஜு தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.