
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை காலை 10.30 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்க, தொழில் நிறுவன விரிவாக்கம் உள்ளிட்டவை தொடர்பாக விவாதிக்கவும், பல்வேறு முக்கிய துறைகளுக்கான திட்டங்களுக்கான ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், மகளிருக்கு ரூ.1,.000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தின் தற்போதைய நிலை தொடா்பாகவும், மகளிருக்கென பிரத்யேகமாகச் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், தோ்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்படும் எனத் தகவல்கள் கூறுகின்றன.
கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, துறைரீதியான அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் அரசு மருத்துவா்களின் ஊதிய முரண்பாடு விவகாரம் மற்றும் அவா்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட துறை ரீதியான நடவடிக்கைகளை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று அரசு மருத்துவா் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.