ஜூலை 27-ல் தஞ்சை வருகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!
தஞ்சாவூரில் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் ரூ. 140 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட 14 கட்டுமானங்களைத் திறந்து வைப்பதற்காகத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஜூலை 27ஆம் தேதி வருகிறார்.

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே கட்டப்பட்டுள்ள மாநாட்டு அரங்கத்தை ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்ட அமைச்சர் கே.என். நேரு.







