விருதுநகரில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு!

விருதுநகரில் சந்தை ஏலம் எடுப்பது தொடர்பாக முன்பகை காரணமாக எஸ்.ஆர். நாகராஜன், அவரது மனைவி தங்க பாண்டியம்மாள் ஆகியோரை ஒரு கும்பல் ஏற்கனவே வெட்டி கொலை செய்தது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

விருதுநகர்: விருதுநகரில் முன்பகை காரணமாக மருது சேனை அமைப்பின் மாநில பொருளாளர் உட்பட மூன்று பேரை முன்பகை காரணமாக அரிவாளால் வெட்டி விட்டு ஒரு கும்பல் செவ்வாய்கிழமை தப்பிச் சென்றது.

விருதுநகரில் சந்தை ஏலம் எடுப்பது தொடர்பாக முன்பகை காரணமாக எஸ்.ஆர். நாகராஜன், அவரது மனைவி தங்க பாண்டியம்மாள் ஆகியோரை ஒரு கும்பல் ஏற்கனவே வெட்டி கொலை செய்தது.

கடந் தாண்டு அச்சந்தை ஏலம் எடுப்பதில் பிரச்னை ஏற்படும் சூழல் உருவானது. இதனால் ஏலம் தள்ளி வைக்கப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்டோர்களுக்கிடையே சமாதான பேச்சு வார்த்தையில் முடிவு ஏற்பட்டது.

அதன் அடிப்படையில் மருது சேனை தரப்பைச் சேர்ந்த குமரவேல் என்ற குமரன் தரப்பினர் சந்தையை ஏலத்தில் எடுத்தனர். இந்த நிலையில் மையிட்டான்பட்டியை சேர்ந்த வினித் என்பவரை மருது சேனை அமைப்பின் நிறுவன தலைவர் ஆதி நாராயணன் மற்றும் குமரன் தரப்பினர் இணைந்து காரைக்குடியில் வெட்டி கொலை செய்ததாக கூறப்படுகிறது.

இதில் ஆதி நாராயணன் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். ஆனால் குமரன் மீது போலீஸôர் வழக்கு பதிவு செய்ய வில்லையாம். இதனால் வினித் தரப்பினர் கடும் ஆத்திரத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தச் சூழலில் பழைய மீன்கடை பேட்டை பகுதியில் உள்ள கடையில் குமரன் (47), அவரது உறவினர் ரூபி (42), ஆதி நாராயணனின் மருமகன் ராம்குமார் இருந்துள்ளனர்.

அப்போது இரு சக்கர வாகனங்களில் வந்த எட்டு பேர் கொண்ட கும்பல் மூவரையும் அரிவாளால் வெட்டி விட்டு, தப்பி விட்டனர். இதில் குமரன் பலத்த காயமடைந்ததாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்த மேற்கு போலீசார், மூவரையும் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் முதலுதவிக்கு பின், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இது தொடர்பாக விருதுநகர் மேற்கு போலீசார் வழக்கு பதிந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவு அடிப்படையில் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com