முல்லைப் பெரியாறு அணையில் நீர்வரத்து அதிகரிப்பு

முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
முல்லைப் பெரியாறு அணை
முல்லைப் பெரியாறு அணை

கம்பம்: முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையில் தென்மேற்குப் பருவமழை பொய்த்த நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மழை பெய்ய தொடங்கியுள்ளது. 

அதிகரிக்கும் நீர்வரத்து
திங்கள்கிழமை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான பெரியாறு அணையில் 24.3 மில்லி மீட்டர் மழையும் தேக்கடி ஏரியில் 21.6 மி.மீ., மழையும் பெய்ததால் அணைக்குள் நீர் வரத்து விநாடிக்கு 737.36 கன அடியாக இருந்ததால் நீர் மட்டம் 120.10 அடியாக இருந்தது.

செவ்வாய்க்கிழமை பெரியாறு அணையில் 20.6 மி.மீ., தேக்கடி ஏரியில் 14.4 மி.மீ., மழையும் பெய்ததால் அணைக்குள் நீர்வரத்து வினாடிக்கு 1092.81 கன அடியாக இருந்ததில் நீர்மட்டம் 120.40 அடியாக இருந்தது. அணைக்குள் நீர்வரத்து அதிகரிப்பால் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மின் உற்பத்தி
பெரியாறு அணையிலிருந்து தமிழக பகுதிக்கு திறக்கப்படும் 400 கன அடி தண்ணீரால், தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில் இருந்து ஒரு மின்னாக்கி இயக்கப்பட்டு 36 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

அணை நிலவரம்
செவ்வாய்க்கிழமை அணையின் நீர்மட்டம் 120.40 அடி (மொத்த உயரம் 152 அடி), அணையில் நீர் இருப்பு 2707.20 மில்லியன் கன அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 1091.81 கன அடியாகவும், தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் வினாடிக்கு 400 கன அடியாகவும் இருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com