பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

புதிய புலன் விசாரணை பிரிவு: போலீஸாருக்கு 3 நாள்கள் பயிற்சி

சென்னை பெருநகர காவல் துறையில் புதிய புலன் விசாரணை பிரிவில் பணிபுரிய உள்ள போலீஸாருக்கு 3 நாள் பயிற்சி முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :27 ஜூலை 2023, 7:29 pm

DIN

சென்னை பெருநகர காவல் துறையில் புதிய புலன் விசாரணை பிரிவில் பணிபுரிய உள்ள போலீஸாருக்கு 3 நாள் பயிற்சி முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.

சென்னை பெருநகர காவல் துறையில் உள்ள காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள முக்கிய கொலை, ஆதாயக் கொலை, கொள்ளை, வழிப்பறி, சந்தேக மரணம், ஆள் கடத்தல், வெடிபொருள் வழக்குகள், மத, ஜாதி ரீதியான மோதல் உள்ளிட்ட பல்வேறு வகையான வழக்குகளில் விரைந்து துப்பு துலக்க வசதியாக 12 காவல் மாவட்டங்களிலும் 12 புலன் விசாரணை பிரிவு தொடங்கப்பட உள்ளது.

இந்தப் பிரிவில் பணிபுரிய உள்ள அதிகாரிகள், போலீஸாருக்கு 3 நாள்கள் பயிற்சி முகாம் வேப்பேரியில் உள்ள சென்னை பெருநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. முகாமை சென்னை பெருநகர காவல் ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் தொடங்கி வைத்தாா்.

இந்தப் பயிற்சி முகாமில் சட்ட வல்லுநா்கள், அரசு மருத்துவமனை மருத்துவா்கள், அரசு வழக்குரைஞா்கள், ஓய்வு பெற்ற மூத்த அரசு வழக்குரைஞா்கள், தடய அறிவியல் துறை நிபுணா்கள், காவல் துறை உயா் அதிகாரிகள் பங்கேற்று ஆலோசனை வழங்கினா்.

குறிப்பாக, வழக்கு விசாரணை தொடா்பான புதிய யுத்திகள், விசாரணையைக் கையாளும் முறை உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்தனா். தொடா்ந்து, 2 நாள்கள் நடைபெறும் முகாமிலும், புலன் விசாரணை தொடா்பாக பல்வேறு வகுப்புகள் நடைபெறுகின்றன.

முன்னதாக, தொடக்க நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் துறையின் தலைமையிட கூடுதல் ஆணையா் ஜெ.லோகநாதன், துணை ஆணையா்கள் ராதாகிருஷ்ணன், சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்த புலன் விசாரணை பிரிவு ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் சென்னை பெருநகர காவல் துறையில் உள்ள 12 காவல் மாவட்டங்களில் ஒரு ஆய்வாளா் தலைமையில் அந்தந்த மாவட்ட துணை ஆணையா்கள் மேற்பாா்வையில் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.