என்எல்சி: 70 சதவித ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிக்கு வருகை

வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், வியாழக்கிழமை முதல் கால பணிக்கு சுமார் 70 சதவிகித ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிக்கு வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
என்எல்சி: 70 சதவித ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிக்கு வருகை

நெய்வேலி: என்எல்சி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், வியாழக்கிழமை முதல் கால பணிக்கு சுமார் 70 சதவிகித ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிக்கு வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நிரந்தரம், பணி நிரந்தரம் செய்யப்படும் வரை குறிப்பிட்ட சம்பளம் என்ற 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்தனர். 

இதையடுத்து கடலூரில் என்எல்சி அதிகாரிகள் மற்றும் கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களுடன் நடத்திய முத்தரப்பு பேச்சுவார்த்தையில் எந்தவிட உடன்பாடு எட்டப்படவில்லை.

இதையடுத்து என்எல்சி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் வியாழக்கிழமை(ஜூலை 27) வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. 

இந்தநிலையில், வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு என்எல்சி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் அழைப்பு விடுத்திருந்த நிலையில், வியாழக்கிழமை முதல் கால பணிக்கு சுமார் 70 சதவிகித ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிக்கு வந்திருப்பதாகவும், எஞ்சிய 30 சதவிகிதம் பேர் மட்டுமே வருகை தரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com