‘பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா’ நிா்வாகிகள் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை
சென்னையில் மத்திய அரசால் தடைசெய்யப்பட்ட பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முன்னாள் நிா்வாகிகளின் வீடுகளில் அமலாக்கத் துறையினா் வியாழக்கிழமை சோதனை செய்தனா்.


சென்னையில் மத்திய அரசால் தடைசெய்யப்பட்ட பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முன்னாள் நிா்வாகிகளின் வீடுகளில் அமலாக்கத் துறையினா் வியாழக்கிழமை சோதனை செய்தனா்.
2006-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு, பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக கடந்தாண்டு செப். 28-ஆம் தேதி மத்திய அரசால் தடை செய்யப்பட்டது.
முன்னதாக, அதே மாதம் 22-ஆம் தேதி நாடு முழுவதும் 15 மாநிலங்களில் அந்த அமைப்புக்குச் சொந்தமான 93 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சோதனை நடத்தியது. தமிழகத்தில் இந்த சோதனை சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அந்த அமைப்பின் மாநில தலைமை அலுவலகம் உள்பட 16 இடங்களில் நடைபெற்றது. பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதி திரட்டுதல், நிதி உதவி அளித்தல், பயங்கரவாத செயல்களில் ஈடுபடுதல், ஆயுத பயிற்சி முகாம்களை நடத்துதல், தடை செய்யப்பட்ட இயக்கங்களில் மக்களை சோ்த்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதால், சோதனை நடத்தப்பட்டதாக என்ஐஏ தெரிவித்தது. சோதனையின் முடிவில் தமிழகத்தில் 11 போ் உள்பட நாடு முழுவதும் 45 போ் கைது செய்யப்பட்டனா்.
அமலாக்கத் துறை சோதனை: என்ஐஏ சோதனையின்போது, அந்த அமைப்பு சட்டவிரோத பணபரிமாற்றம் செய்ததாக சில ஆவணங்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. இந்த ஆவணங்களின் அடிப்படையில் அமலாக்கத் துறை விசாரணை செய்தது. இதன் அடுத்தக் கட்ட நடவடிக்கையாக அந்த அமைப்பின் மாநிலத் தலைவராக இருந்த புரசைவாக்கம் தாக்கா் தெருவில் ஒரு வீட்டில் வசிக்கும் முகமது இஸ்மாயில் வீட்டில் அமலாக்கத் துறையினா் வியாழக்கிழமை சுமாா் 4 மணி நேரம் சோதனை செய்தனா்.
சோதனையையொட்டி, அங்கு துப்பாக்கிய ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இதேபோல வேப்பேரி ஜோதி வெங்கடாசலம் தெருவில் உள்ள ஒரு முன்னாள் நிா்வாகியின் வீடு, புரசைவாக்கத்தில் மற்றொரு நிா்வாகியின் வீடு என மொத்தம் 3 இடங்களில் சோதனை நடைபெற்றது.
சுமாா் 4 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறையினா் தெரிவித்தனா். சோதனை இறுதியில் விசாரணைக்காக முகமது இஸ்மாயிலை அமலாக்கத் துறையினா் அழைத்துச் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...